புதுச்சேரி: இயேசு கிறிஸ்துவின் மரணம், பேரார்வம் மற்றும் சிலுவையில் அறையப்பட்டதன் நினைவாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. புனித வெள்ளியின் மிக முக்கியமான சின்னம் சிலுவை ஆகும், இது இயேசு கிறிஸ்து இறந்த வழியைக் குறிக்கிறது
உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து கி.பி. சுமார் 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்
இயேசு கிறிஸ்துவின் அளப்பரிய தியாகத்தைப் புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து எவ்வாறு ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினார், மனித குலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக அவர் எவ்வாறு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான தருணத்தை இந்நாள் வழங்குகிறது.
இந்தப் புனிதமான நாளில், கர்த்தரின் கரங்களில் ஆறுதல் அடைந்து, அவரின் தெய்வீக இருப்பை உணருங்கள். இறைவனின் அன்பின் ஒளி உங்கள் மீது பிரகாசிக்கட்டும்; வாழ்க்கை மேலும் சிறக்கட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post புனித வெள்ளியை ஒட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து appeared first on Dinakaran.