லண்டன்: இங்கிலாந்தின் லண்டனில் உள்ள சவுத்என்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம் நெதர்லாந்தின் லெலிஸ்டாட்டுக்கு செல்ல இருந்தது.புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். விமான விபத்து காரணமாக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
The post புறப்பட்ட சிறிது நேரத்தில் லண்டனில் விமானம் கீழே விழுந்து விபத்து: 4 பேர் பலி appeared first on Dinakaran.