குமுளி: சபரிமலைக்கு புல்மேடு வனப்பாதையில் சென்ற 3 ஐயப்ப பக்தர்கள் ‘தடம்மாறி’ காட்டுப்பகுதிக்குள் சிக்கினர். இவர்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் தடம்மாறி பயணிக்க கூடாது என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.
ஐயப்ப பக்தர்கள் சத்திரம் – புல்மேடு, எருமேலி – பெரியபாதை ஆகிய வனப்பாதைகள் வழியே பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இது அடர் வனப்பகுதி ஆகும். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க குறிப்பிட்ட நேரத்திலே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒவ்வொருநாள் காலையிலும் முதன்முதலாக வனப்பாதையில் நுழையும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வழிநடத்திச் செல்கின்றனர்.