சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன். இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். பல்கலைக்கழக நிர்வாகிகளை இயக்குனராக கொண்ட பூட்டர் பவுண்டேஷன் என்ற கல்வி நிறுவனத்தை தொடங்க சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வைத்திருந்தார். இதற்கிடையில் பல்கலைக்கழக வளத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் இவை பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் குற்றம் சாட்டப்ட்டது. இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவனை சாதியை கூறி திட்டியதாக அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார், ஜெகநாதனை கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் நீக்கியது. இதையடுத்து, தொழிற்சங்க நிர்வாகியான கிருஷ்ணவேணி, பொதுச்செயலாளர் சக்திவேல், இளங்கோவன் ஆகியோர் சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலீ ராமலட்சுமி முன் ஆஜராகிவிளக்கம் அளித்தனர். இந்தநிலையில் பல்கலை பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்தி, டீன் ஜெயராம், பூட்டர் பவுண்டேசன் இயக்குநர் சுப்ரமணியபாரதி, சங்க நிர்வாகிகள் வைத்தியநாதன் ஆகியோர் நேற்று மாலை சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
The post பூட்டர் பவுண்டேசன் விவகாரம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரிடம் விசாரணை appeared first on Dinakaran.