பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ருவாண்டாவில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர். இவர், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்வதில் முக்கிய நபராக இருந்தவர்.