பெங்களூரு: உத்தர பிரதேசத்தை சேர்ந்த அதுல் சுபாஷ் (34) பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றினார். கடந்த திங்கள்கிழமை அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக, அவர் 24 பக்க கடிதம் எழுதி வைத்ததுடன் 90 நிமிடங்கள் அவர் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். தனது மரண விவகாரத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்டோரை எக்ஸ் தளத்தில் டேக் செய்து, சர்வதேச அளவில் விவாதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
அதுல் சுபாஷ் எழுதிய கடிதத்தில், ‘‘எனக்கும் என் மனைவி நிகிதா சிங்காரியாவுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அடுத்த சில தினங்களில் எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களில் என் மாமனார் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆனால் நான் வரதட்சணை கேட்டதால்தான் அவர் மாரடைப்பால் இறந்தார் என மனைவியின் வீட்டார் போலீஸில் புகார் அளித்தனர்.