துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தார். அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார். அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.