சென்னை: பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகின்றன என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடுதான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. பெண்களின் வாழ்வாதாரம் உயர எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்டவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மகளிர் உரிமை திட்டத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகிறது. பெண்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யவே போராட வேண்டி இருந்தது. பெண்கள் சுதந்திரமாக வேலை செய்யக்கூடிய சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது என்று கூறினார்.
The post பெண்கள் பாதுகாப்பில் எந்த சமரசமுமின்றி முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்: அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.