பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி சுவர்ண சவுதாவில் சட்ட மேலவை கூட்டம் கடந்த வாரம நடந்தது. அப்போது பெண் அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கர் மற்றும் பாஜ மூத்த தலைவரும் எம்.எல்.சியுமான சி.டி.ரவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது தன்னைப் பற்றி சி.டி.ரவி ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக அமைச்சர் ஹெப்பாள்கர் கொடுத்த போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சி.டி.ரவி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை ஆபாசமாக பேசியதாக வெளிவந்த தகவலையடுத்து, அவரது ஆதரவாளர்கள் சி.டி.ரவி மீது தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
இந்தநிலையில் சி.டி.ரவி மீதான வழக்கு சிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று அறிவித்தார்.
The post பெண் அமைச்சரை ஆபாசமாக பேசிய விவகாரம்; பாஜ தலைவர் மீதான வழக்கில் சிஐடி போலீஸ் விசாரணை: கர்நாடகா அரசு அதிரடி appeared first on Dinakaran.