ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததோடு, முதல் போட்டியை தோற்ற பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியையும் கொடுத்துள்ளது.
டாஸ் வென்றிருந்தால் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருப்போம் என ரோஹித் சர்மா கூறியது எத்தனை பெரிய தவறில் போய் முடிந்திருக்கும் என்பது போட்டியைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். ஆகவே இன்னும் கேப்டன்சியில் ரோஹித் சர்மா பிட்சின் தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று தெரிகிறது.