சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக, சென்னை எழும்பூர் – மங்களூரு சிறப்பு ரயில் உள்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து நாளை (ஜன.13) பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் (06037) புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு மங்களூரு சந்திப்பை அடையும். இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிகோடு வழியாக மங்களூரு சந்திப்பை சென்றடையும்.