சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும். +2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து வரும் 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் வரும் 13 முதல் 17 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
The post பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணை தேர்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.