சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். மே 7 முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவினை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைக்க உள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வுகள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 7ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் எனமொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர். இந்த தேர்வானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணியானது நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரத்தோடு முழுவதுமாக பணிகள் முடிவடைந்தது. தினையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே மாதம் 9ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in மூலம் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிட்டு மாணவர்கள் TN HSC முடிவை 2025 சரிபார்க்கலாம்.
இந்த நிலையில் உயர்கல்வியில் சேரவுள்ள மாணவர்களுக்கு விண்ணங்கங்கள் வழங்கும் பணியானது தொடங்கவுள்ளது. அந்த வகையில் (மே 7ஆம் தேதி) நாளை மறுநாள் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
The post பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.