இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ X7 ப்ரோ (5 ஜி ), போக்கோ X7 (5 ஜி ) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் வெளியிட்டார். புதிதாக அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ள இரண்டு போன்களிலும் பேட்டரி லைஃப், டிஸ்ப்ளே போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளன.
சிறப்பம்சங்கள்: போக்கோ X7 ( 5 ஜி ) விலை ரூ, 19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூசி, தண்ணீரைத் தாங்கும் வகையில் இதன் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படும் வசதியும் உள்ளது. மேம்படுத்தப்பட்ட திறனையுடைய கேமரா வசதியுடன், எடிட்டிங்கும் மேம்படுத்தப்பட்டுள்ளது.