சென்னை: உலக நாடுகளில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்து வந்த போப் பிரான்சிஸ் (88), வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானதையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் மாநிலங்கள் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இதன்படி தமிழ்நாட்டில் 22ம் தேதி (நேற்று), 23ம் தேதி (இன்று ) இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கின் நாளில் ஒரு நாள் மாநிலம் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் (இறுதிச் சடங்கின் தேதி தனித்தனியாக அறிவிக்கப்படும்). மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் நாட்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும், அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post போப் பிரான்சிஸ் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு துக்கம் அனுசரிப்பு appeared first on Dinakaran.