பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 364 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. நிகழாண்டில் நவம்பர் மாதம் வரை மட்டும் 327 மகப்பேறு மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 40 நாட்க‌ளில் பெல்லாரியில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட பொது மருத்துவமனையில் மட்டும் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
இதற்கு கர்ப்பிணி நோயாளிகளுக்கு நரம்புகளில் தரமற்ற மருந்து செலுத்தப்பட்டதால் மாரடைப்பு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி யுள்ளன. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி கர்நாடக பாஜக சார்பில் சட்ட‌மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவடி நாராயணசாமி, லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீலிடம் புகார் அளித்தார்.