சென்னை :மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், தமிழ்நாடு மூலம் இதுவரை ரூ.643.88 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் 2021ம் ஆண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட முன்னோடி திட்டமான விடியல் பயண திட்டத்தில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டது. சமூக பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பை உயர்த்தும் முயற்சியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மகளிர் விடியல் பயணத்தில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை ரூ.643.88 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தினமும் சராசரியாக 57.81 லட்சம் பெண்கள் மகளிர் விடியல் பயண பேருந்துகளில் பயணம் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 7,495 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 126.53 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மகளிர் விடியல் பயண திட்டத்தின் மூலம், தமிழ்நாடு மூலம் இதுவரை ரூ.643.88 கோடி இலவச பயணங்கள்!! appeared first on Dinakaran.