மும்பை: மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்தன. பாஜக தனித்து 132 இடங்களை கைப்பற்றியது.