சென்னை: மக்களைத் தேடி பயணம், 12வது நாள் பயணமாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, பாஷ்யம் ரெட்டி தெருவில் வசிக்கும் பொதுமக்களிடம், வீதி வீதியாக சென்று அவர்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து, அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமராவை உடனடியாக பொருத்துமாறு காவல்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி, சென்னை கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட 44 மாநகராட்சி வார்டுகளில் உள்ள 83 வட்டங்களிலும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் வீதி வீதியாக பொதுமக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் தேவைகளை கண்டறிந்து குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மக்களைத் தேடி பயணம், 12வது நாள் பயணமாக இன்று (21.01.2025) சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க. நகர் வடக்கு பகுதி, 74-வது வார்டு, ஓட்டேரி, பாஷ்யம் ரெட்டி முதல் மற்றும் இரண்டாம் தெருவில் வசிக்கும் பொதுமக்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, அப்பகுதியில் சாலையோரங்களிலுள்ள கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றிடுமாறும், பழுதடைந்த மின்சார பில்லர் பாக்சை மாற்றி புதிதாக அமைத்திடுமாறும், சம்மந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் குற்றச்சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சிசிடிவி கேமராவை உடனடியாக பொருத்துமாறு காவல்துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தி மற்றும் அப்பகுதியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
The post மக்களைத் தேடி பயணம்: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடம் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.