மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையை இரண்டாம் நிலையில் இருந்து முதல் நிலைக்கு தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மதுராந்தகம் அரசு மருத்துவமனை அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, மாவட்ட குழு உறுப்பினர் மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், லத்தூர், ஒன்றியங்களை சேரந்த ஏராளமான கிராம மக்கள் இந்த மருத்துவமனையினை நம்பி இருக்கின்றனர். அதேபோன்று சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களில் காயமடைபவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் தேவையான டாக்டர்கள், நர்சுகள், ஸ்ட்ரெச்சர் தள்ளுபவர், சலவையாளர் போன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவமனைக்கு இரவு நோர பாதுகாவலர்கள நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
The post மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.