சமூக ஊடகங்களில் ‘மென்ஸ்ட்ரல் மாஸ்கிங்’ என்ற பெயரில் பரவி வரும், மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் பூசுவது அறிவியல் பூர்வமாக எந்தப் பலனையும் அளிக்காது என்றும், நுண்ணுயிரிகள் கலந்த இது சருமத்திற்கு எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தக்கூடிய சுகாதாரமற்ற செயல்முறை என்றும் தோல் மருத்துவர் எச்சரிக்கிறார்.

