சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் யுஜிசி விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மாநிலங்களின் கல்வி சுயாட்சியை சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது என்று கூறியுள்ளார்.
The post மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: கோவி.செழியன்! appeared first on Dinakaran.