மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத்தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு நேர உறுப்பினராக எம்.விஜயபாஸ்கர், பகுதிநேர உறுப்பினர்களாக சுல்தான் அகமது இஸ்மாயில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, ஆயிரம் விளக்கு எம்எல்ஏ என்.எழிலன், மல்லிகா சீனிவாசன், ஜெ.அமலோற்பவநாதன், ஜி.சிவராமன், நர்த்தகி நடராஜ் ஆகியோரும் உள்ளனர்.