மலையாளத்தில் ஹிட்டடித்துள்ள ‘மார்கோ’ படம் புதியதொரு வசூல் சாதனையை படைத்திருக்கிறது. மேலும் 2-ம் பாகமும் உருவாகவுள்ளது. ‘மார்கோ’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகத்தினை உருவாக்க படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இதர மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டது படக்குழு. உலகளவில் படத்தின் வசூலும் ரூ.100 கோடியை கடந்துவிட்டது. ரூ.30 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.