நடிகர் ஆர்ஜே பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கிய படம், ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், வரவேற்பைப் பெற்றது.
இதன் 2-ம் பாகத்தை சுந்தர்.சி இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்துடன் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் அவ்னி சினிமேக்ஸ், ஐ வி ஓய் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பி ஃபோர் யூ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதைத் தயாரிக்கின்றன.