சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் 79 ரன்களில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது.
இலங்கையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது இந்தியா. இந்திய அணியின் பேட்ஸ்மேன் யோகேந்திர படோரியா, 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும்.