தமிழகம் எப்போதும் அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாய் திகழும் என்பதற்குச் சான்றாக கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவையும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறனையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார் மகாராஷ்டிர மாநில ஆளுநரும், பாஜக முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்த சி.பி.ஆர்., தோழர் இரா.நல்லகண்ணுவை காணச் சென்றபோது, நானும் உடன் சென்றேன். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவராகவும் இருக்கும் நல்லகண்ணுவின் அரசியல் சித்தாந்தமும், சிபிஆரின் சித்தாந்தமும் எதிரும் புதிருமானவை.