புதுடெல்லி: பணமோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, உடனடியாக தமிழகத்தின் மூத்த கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (டிச. 2, 2024) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பலரிடம் போக்குவரத்துத் துறையில் வேலை கிடைக்கச் செய்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, செப்டம்பர் 29-ம் தேதி செந்தில் பாலாஜி கேபினெட் அமைச்சராக பதவியேற்றார்.