சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி. 10ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும். தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடக்க இருக்கிறது. இதற்கான தேதியை இறுதி செய்யக்கூடிய நடவடிக்கைககளில் சட்டப்பேரவை செயலகம், தமிழக முதல்வர் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பான அம்சங்கள் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 2025 – 2026ஆம் நிதியாண்டிற்கானதமிழக சட்டமன்ற பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 10ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்..!! appeared first on Dinakaran.