சென்னை: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக சென்னை காரப்பாக்கத்தில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. காரப்பாக்கத்தில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக நிர்வாகிகள் எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன், அன்பரசு ஆகியோரை போலீஸ் கைது செய்தது. சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். புகாரின் அடிப்படையில் பாஜகவை சேர்ந்த 5 பேரை கைது செய்து கண்ணகி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிய பாஜகவினர் 5 பேர் கைது appeared first on Dinakaran.