
கொல்கத்தா: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்துள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீராங்கனையான ரிச்சா கோஷுக்கு தங்க முலாம் பூசப்பட்ட பேட், பந்தை பரிசாக வழங்க அம்மாநில கிரிக்கெட் சங்கம் (சிஏபி) முடிவு செய்துள்ளது.
அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வென்று கோப்பையை முதன்முறையாகக் கைப்பற்றியது. இந்திய அணியில் இடம்பிடித்த ரிச்சா கோஷ் ஒட்டுமொத்தமாக தொடரில் 235 ரன்கள் விளாசினார்.

