
புதுடெல்லி: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஜம்மில், லக்னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்காமை சேர்ந்த ஆதில், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், நகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 மருத்துவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் நிஸார் உல் ஹசன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. அவர் தற்போது தலைமறைவாக இருக்கிறார்.

