செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் வருகிற 25ம் தேதி நடைபெற இருக்கிற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான செயல்வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்கல்பட்டு நகரம் காட்டாங்குளத்தூர் ஒன்றியம் வடக்கு தெற்கு மறைமலைநகர் நந்திவரும் கூடுவாஞ்சேரி நகரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில், தமிழக சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சரும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளதால் வார்டு செயலாளர், கிளை செயலாளர் முதல் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் என அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பல்லாவரம் பொதுக்குட்டத்திற்கு 80சதவீதம் கட்சி நிர்வாகிகள் கட்டாயம் வரவேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர செயலாளர் எஸ்.நரேந்திரன், மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம்,
கூடுவாஞ்சேரி நகர செயலாளர் எம்.கே.டி. கார்த்திக், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சிமன்ற துணை தலைவர் கே.பி.ராஜன், ஒன்றிய நிர்வாகிகள் திருமலை ஜீவானந்தம், ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் குறித்து திமுக செயல்வீரர்கள் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு appeared first on Dinakaran.