
தேசத்தின் இளம் வயது பில்லியனர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் ‘பெர்ப்ளெக்சிட்டி'யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ். 31 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. டெக் உலகின் ரியல் கேம்சேஞ்சரான அவரின் வெற்றிக் கதையை பார்ப்போம்.
சென்னையில் பிறந்தவர்: கடந்த 1994-ல் ஜூன் 7-ம் தேதி அன்று சென்னையில் பிறந்தார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். கேட்ஜெட்கள், கோடிங் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகள் என சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்ட பிள்ளையாக வளர்த்துள்ளார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ‘மெட்ராஸ் ஐஐடி’-யில் மின் பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்தார். அப்போதே தனது ஜூனியர்களுக்கு தான் கற்றதை பகிரும் பண்பு கொண்டவராக இருந்துள்ளார்.

