
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் அபார வெற்றி பெற்றதோடு, வெற்றி உரையில் ட்ரம்ப்பை தெறிக்கிவிட்டு கவனம் ஈர்த்துள்ளார் ஜோரான் மம்தானி (Zohran Mamdani). இவர் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும், முதல் இந்திய அமெரிக்க முஸ்லிம் என்பதும், இந்த நூற்றாண்டில் நியூயார்க்கின் இளம் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யார் இந்த ஜோரான் மம்தானி? – நீங்கள் ‘சலாம் பாம்பே’, ‘மான்சூன் வெட்டிங்’ போன்ற திரைப்படங்கள், ‘ஸோ ஃபார் ஃப்ரம் இந்தியா’ போன்ற ஆவணப்படம் பற்றி அறிந்திருந்திருந்தால், அதனை இயக்கிய மீரா நாயரையும் தெரிந்திருக்கும். அந்த பிரபல இயக்குநர் மீரா நாயர் மற்றும் உகாண்டாவைச் சேர்ந்த மஹமூத் மம்தானியின் மகன் தான் இந்த ஜோரான் மம்தானி.

