சென்னை: “தமிழகத்தில் உள்ள உயரழுத்த மின்பிரிவு நுகர்வோர் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 10 காசு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்” என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் நூற்பாலைகள் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உயரழுத்தப் பிரிவு நுகர்வோர் வெளிச் சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்தை எடுத்துச் செல்ல மின்வாரியத்தின் மின்வழித் தடங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காக, மின்வாரியம் ஏற்கெனவே வீலிங் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் (சர்சார்ஜ்) வசூலிக்கிறது. தற்போது மின்வாரியம் வசூலிக்கும் சர்சார்ஜ் யூனிட்டுக்கு ரூ.1.96 ஆக உள்ளது.