ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினியின் ‘கூலி’ படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி முடிவாகாமல் இருந்தது. தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.