நாக்பூர்: நாக்பூரில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி கோப்பையைக் கைப்பற்றியது.
நாக்பூரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் விதர்பா 379 ரன்களும், கேரள அணி 342 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 4-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.