
கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – விதர்பா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 291 ரன்களும், விதர்பா 501 ரன்களும் குவித்தன. 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.
ஆதிஷ் 46, விமல் குமார் 9, பிரதோஷ் ரஞ்ஜன் பால் 14, ஆந்த்ரே சித்தார்த் 11, ஷாருக் கான் 40, முகமது அலி 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாபா இந்திரஜித் 189 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்களும், கேப்டன் சாய் கிஷோர் 4 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் விதர்பா அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. தமிழ்நாடு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

