வயநாடு: கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்துள்ளார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 ( 4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார்.
முன்னதாக கடந்த 2019 மக்களவை தேர்தலில் வயநாட்டில் 7.06 லட்சம் வாக்குகளை ராகுல் காந்தி பெற்றிருந்தார். 2024-ல் 6.47 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார். இப்போது வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி வாக்கி எண்ணிக்கை நிறைவு பெற இன்னும் நேரம் இருக்கும் சூழலில் இதுவரை 6,2 லட்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.