ராமநாதபுரம் மாவட்டத்தின் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு உறுதிபட கூறியுள்ளது. மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்ன நடக்கிறது?