இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அந்நாட்டு கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் தங்கச்சிமடத்தில் நேற்று திருவோடு ஏந்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி முதல் 18 படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டு, 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், 38 மீனவர்கள் தண்டனை பெற்று, அங்குள்ள சிறைகளில் உள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 42 மீனவர்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த 13 மீனவர்கள் நீதிமன்றக் காவலில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.