ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு சென்ற களஞ்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். 8 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களின் காவல் நேற்று முடிந்ததை தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜமீல், ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருக்கு இலங்கை மதிப்பில் ₹50 ஆயிரம் அபராதம் அல்லது 2 மாதம் சிறை தண்டனை, இரண்டு படகு ஓட்டுநர்களுக்கு தலா ₹60 லட்சம் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
மீனவர்கள் 8 பேருக்கும் மொத்தமாக ₹1 கோடியே 23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது ₹35 லட்சம் ஆகும். இதையடுத்து மீனவர்கள் 8 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேருக்கு ரூ35 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.