மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையில் நேற்று நிறுவனத்தின் 48-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசியதாவது:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2026-ம் ஆண்டு மத்தியில் பொதுப் பங்குகளை (ஐபிஓ) வெளியிட்டு பங்குச் சந்தையில் நுழைய உள்ளது. மேலும், ஜியோ நிறுவனம் தனது செயல்பாடுகளை வெளிநாடுகளில் விரிவுபடுத்த உள்ளது.