தமிழகத்தில் ரூ.10 கோடியில் சாரண இயக்க தலைமை அலுவலகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பாரத சாரண சாரணியர் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பெருந்திரளணி திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் கடந்த ஜன. 28-ம் தேதி தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றம் நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் சாரண, சாரணியர் பங்கேற்று, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த பெருந்திரளணி முகாம் இன்றுடன் நிறைவடைகிறது.