தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.92.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.2.2025) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 92 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களை சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்பு கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 155.28 கோடி ரூபாய் செலவில் 84,000 மெ.டன். கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்குகள், 39.37 கோடி ரூபாய் செலவில் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள். 236.09 கோடி ரூபாய் செலவில் 2,82,750 மெ.டன். கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொது விநியோக திட்டத்தினை மேலும் செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள வட்டங்களில் புதிய வட்ட செயல்முறை கிடங்குகளை நிறுவவும். வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவினை மேம்படுத்தும் வகையிலும் புதிய கிடங்குகள் கட்ட அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் 3000 மெ. டன் கொள்ளளவில் 4 கோடியே 96 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் 2000 மெ. டன் கொள்ளளவில் 4 கோடியே 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவில் 5 கோடியே 23 இலட்சத்து 48 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரி வட்டத்தில் 3000 மெ.டன் கொள்ளளவில் 4 கோடியே 96 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, வேலூர் மாவட்டம், பக்களப்பள்ளி வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவில் 4 கோடியே 2 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்கு, திருவள்ளூர் மாவட்டம், இராமகிருஷ்ணராஜபேட்டை வட்டத்தில் 2000 மெ.டன் கொள்ளளவில் 3 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள், என 26 கோடியே 97 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள்: விவசாயிகளின் நலன் கருதி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டத்தில் தோலி, கற்பகநாதர்குளம், பழையவலம், மேலவாசல் மற்றும் ஆலத்தூர் ஆகிய 5 கிராமங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பெருந்தோட்டம், பெருமங்கலம், காஞ்சிவாய் ஆகிய 3 கிராமங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுமாணக்குடி மற்றும் மேலவாழக்கரை ஆகிய 2 கிராமங்களிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூர் கிராமத்திலும் என 11 கிராமங்களில் தலா 62 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மொத்தம் 6 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணிக்கூட வீணாகக்கூடாது என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சொல்லை செயல் வடிவமாக்கும் விதமாக 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
அதன்படி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் மாவட்டம். மன்னார்குடி வட்டம், மூவாநல்லூர் கிராமத்தில் 20 கோடியே 90 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 33,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், நீலத்தநல்லூர் கிராமத்தில் 8 கோடியே 86 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 13,500 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் டெல்டா அல்லாத பிற மாவட்டங்களான காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜபாத் வட்டம், கட்டவாக்கம் கிராமத்தில் 14 கோடியே 42 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15,000 கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில் 14 கோடியே 42 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 15,000 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள், என 58 கோடியே 61 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள்: என மொத்தம் 92 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், பொது விநியோக திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வட்ட செயல்முறை கிடங்குகளின் கொள்ளளவினை மேம்படுத்தும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம். செய்யூர் வட்டம், செய்யூர் கிராமம் மற்றும் திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் கிராமம். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், கொன்னையூர் கிராமம், கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், சிவாயம் கிராமம், திருவள்ளுர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், திருமழிசை கிராமம். திண்டுக்கல் மாவட்டம். ஒட்டன்சத்திரம் வட்டம், லக்கயன்கோட்டை கிராமம் ஆகிய இடங்களில் மொத்தம் 6000 மெ.டன். கொள்ளளவுடன் 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்! appeared first on Dinakaran.