வாஷிங்டன்: அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரி மாதம் முடிவதற்குள், காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. காசா பகுதியில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்
தின் பேரில் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக எகிப்து அரசின் உயர்நிலைக் குழு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது.