சியோல்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து வடகொரியாவை குறிவைத்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் கடுமையான ராணுவ அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அதிகரித்து வருவதாக சமீபத்தில் வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியது. இந்நிலையில் வடகொரியா தனது தாக்குதல் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கப்பல் ஏவுகணை சோதனையை புதனன்று நடத்தியுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் இதனை மேற்பார்வையிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
The post வடகொரியா கப்பல் ஏவுகணை சோதனை appeared first on Dinakaran.