சென்னை: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை பெருவெளியில் சர்வதேச ஆய்வு மையக் கட்டிடங்கள் கட்டுவதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டிடங்கள் கட்டத் தடை விதித்து, உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதை, தமிழ்நாடு பாஜக சார்பாக வரவேற்கிறோம்.