வாஷிங்டன்: கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு(கேபிடல்) வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கேபிடல் கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையை தொடர்ந்து டிரம்ப்பின் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் கணக்கை மெட்டா நிறுவனம் முடக்கியது.இது தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பர்க் மீது டிரம்ப் வழக்கு தொடுத்தார். கடந்த ஆண்டு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீது போடப்பட்டிருந்த தடைகள் விலக்கப்பட்டன. இந்த நிலையில்,மெட்டா நிறுவனம் மீது தாக்கல் செய்த வழக்கை முடிக்க அதிபர் டிரம்புக்கு ரூ.216 கோடி வழங்க மெட்டா ஒப்பந்தம் செய்துள்ளது.
The post வழக்கை முடிக்க டிரம்புக்கு ரூ.216 கோடி: மெட்டா நிறுவனம் வழங்குகிறது appeared first on Dinakaran.